The Indian Times

அஞ்சான் சூர்யா போல தேசிய விருதினை வாங்க குடும்பத்துடன் கெத்தாக டெல்லி வந்த நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றியை அளித்தது.அதனை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் கைகோர்த்துள்ளார்.சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது

Advertisement

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இயக்குனர் சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல போராட்டங்களுக்கும்,தோல்விக்கும் பிறகு சூர்யாவின் கடின உழைப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த விருதினை பெற குடும்பத்துடன் சூர்யா டெல்லி சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in