The Indian Times

சர்தார் பட நிகழ்ச்சியில் விழுந்து விழுந்து சிரித்த நடிகை லைலா… சொக்கிவிழுந்த ரசிகர்கள்

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் லைலா.கள்ளழகர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர்.அதன்படி பார்த்தேன் ரசித்தேன் தில்,தீனா,உன்னை நினைத்து என வரிசையாக ஹிட் கொடுக்க தொடங்கினார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை சினிமாவில் உள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார் லைலா.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த லைலா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் நடிகை லைலா கலந்துகொண்டுள்ளார். மேடையில் பேசிய நடிகர் கார்த்தி லைலா இப்பொழுதும் மாறவில்லை ஷூட்டிங்கில் நல்ல கலாட்டா செய்வார்,சூர்யா சொல்லியிருக்கிறார் லைலா எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பார்,நாம் பேசவில்லை என்றாலும் அவர் பேசிக்கொண்டே இருப்பார் இப்பொழுதும் அவர் அப்படியே தான் மாறாமல் உள்ளார் என கூற இதனை கேட்டு நடிகை லைலா விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in