The Indian Times

தமிழ் ரசிகர்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்திய காந்தாரா படம்.. BLUESATTAI மாறன் என்ன சொல்லிருக்காரு பாருங்க

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.தற்போது வெளியாகி பல நாட்கள் கழித்து இப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.இப்படத்தினை பார்த்த BLUESATTAI மாறன் இப்படத்தினை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்

Advertisement

இந்த வீடியோவில் ,ஒரு மலைவாசி கிராமம்,அந்த கிராம மக்களை விரட்டிவிட்டு அங்குள்ள பண்ணையார் நிலத்தை அபகரிக்க முயல்கிறார் அதை தடுக்க ஒரு கதாநாயகன் வருகிறான்,இதை பழைய கதை என்று நினைத்தாலும் சினிமாவில் புதிய கதைகளை கொண்டு வந்து ஜெயிப்பவர்களும் இருக்கிறார்கள்,பழைய கதைகளையும் கொண்டு வந்து வித்தியாசமாக காண்பித்து ஜெயிக்கிறவர்களும் இருக்கிறார்கள் இவர்கள் இரண்டாவது ரகம்.இந்த படத்தின் கேமிரா ,பாடல்,பிஜிஎம்,சண்டை காட்சிகள் எல்லாம் சூப்பர்.படத்தின் இயக்குனர் கதாநாயகனாகவே நடித்துள்ளார்.சுமாரான கதையை வித்தியாசமாக எடுத்து வெற்றிபெற செய்ததற்கு பாராட்டுக்கள்.என கூறி படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளார்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in