The Indian Times

விக்கி நீயும் என் பசங்கதான் எனக்கு உலகம்.. மகன்களை மடியில் வைத்து கொஞ்சிய நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேளைகளில் களம் இறங்கிவிட்டார் விக்கி

Advertisement

தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் உடன் தனது இரு மகன்களையும் மடியில் வைத்து அமர்ந்து கொண்டுள்ளார்.இதனை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் இவர்கள் தங்களது மகன்களுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டுள்ளனர்,அதன்படி ஒருவருக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன்,மற்றொருவருக்கு உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in