The Indian Times

மறைந்த வடிவேலு பாலாஜி போலவே அச்சு அசல் மாறிய விஜய் டிவி புகழ்… இன்னும் மறக்காம இருக்காரே புகழ் இதுதான் உண்மையான பாசம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது.

Advertisement

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

Advertisement

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4லும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4லும் கலந்து கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.இந்த சீசனில் இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் கோமாளிகள் ஒவ்வொருவரும் ஒரு கெட்டப்பில் வந்து கலங்கினார்கள்.அதன்படி இந்தவாரம் புகழ் மறைந்த வடிவேல் பாலாஜி கெட்டப்பில் வருகை தந்து அசத்தியுள்ளார்.மேலும் அவரை போலவே சிறிது புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார் மேலும் அந்த பதிவில் என்னுள் என்றும் இருக்கும் உன்னை போல் நான் மாறிய தருணம்… உனக்காக நான் செய்யும் சின்ன அர்ப்பணிப்பு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மாமா எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா… மிஸ் யூ மாமா… என கூறி வருந்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in