The Indian Times

விடுதலை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. என்ன பரிசு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவருக்கு பெயரில் மட்டுமில்லை இவர் எடுக்கும் படங்களிலும் வெற்றி தான்.தொடர்ந்து தரமான கதைகளை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.குறைந்த அளவு படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.வெற்றிமாறன்.இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் அசுரன்.இப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கியுள்ளார்.

Advertisement

கதாநாயகியாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கவுதம் மேனன்,சேத்தன் என பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படம் தற்போது முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.

Advertisement

ஏற்கனவே வெற்றிமாறன் தனது உதவி இயக்குனர்கள் 25 பேருக்கு சொந்த காசில் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்.இந்நிலையில் விடுதலை படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு தங்க நாணயம் வழங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் வெற்றிமாறனின் செயலை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in