நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்ண்ணே…வடிவேலு காமெடியை RECREATION செய்த தாலாட்டு சீரியல் ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்ண்ணே...வடிவேலு காமெடியை RECREATION செய்த தாலாட்டு சீரியல் ஸ்ருதி 1

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்ண்ணே...வடிவேலு காமெடியை RECREATION செய்த தாலாட்டு சீரியல் ஸ்ருதி 2

விளம்பரம்

தற்போது சக நடிகர்களுடன் இவர் வடிவேலு காமெடியை திரும்ப அப்படியே செய்து அசத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.சீரியல் படப்பிடிப்பின் பொழுது கொடுக்கப்படும் இடைவெளியில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை செய்து வெளியிட்டு வருகிறார் ஸ்ருதி.தற்போது வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ பெருமளவு இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதில் நகைச்சுவையை விட ஸ்ருதி செய்யும் ரியாக்ஷன்களை பார்க்கும் பொழுது தான் சிரிப்பு அதிகமாகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment