The Indian Times

தன்னுடன் வர அழைத்து கதை கதையாக கூறிய கோபி…பங்கமாய் ஒரே வார்த்தையில் கலாய்த்த ராதிகா ! BAGYALAKSHMI PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை போண்டடியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்இந்நிலையில் இவருக்கும் ராதிகாவுக்கும் ஆன உறவு மனைவி பாக்கியாவுக்கு தெரிந்தது.இதனால் வீட்டில் பிரச்சனை வெடித்து பாக்கியா இனி காபியுடன் வாழமாட்டேன் என கூறி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் ராதிகா,பாக்கியாவுக்கு துரோகம் செய்யமாட்டேன் என கோபியை விட்டு கிளம்ப முடிவெடுத்துள்ளார்.அவரை வழிமறித்து கோபி அவரை தன்னுடன் வருமாறு கதை கதையாய் அளக்க அவர் கதைகளை கேட்டு இறுதியில் நான் கிளம்புறேன் என கூறி கோபியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ,மேலும் ரசிகர்கள் கோபிக்கு இது தேவை தான் தற்போது மனைவியும் இல்லை காதலியும் இல்லை அனுபவிக்கட்டும் என கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்

EMBED VIDEO CREDITS  : VIJAY TELEVISON

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in