The Indian Times

ADDRESS Official Teaser | Atharva Raja Mohan

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. அவருக்கு பின் அவரது மகன் அதர்வா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பானா காத்தாடி படம் மூலமாக அறிமுகமான அதர்வா , பின் முப்பொழுதும் உன் கற்பனைகள் , பரதேசி , இரும்பு குதிரை , சண்டி வீரன் , இமையாக்கா நொடிகள் என பல படங்களில் நடித்துள்ளார். முதல் படமே சமந்தா உடன் நடித்து பின்னர் காலத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடனும் நடித்தார் அதர்வா.

Advertisement

இவர் இறுதியாக 100 என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார். இதை தொடர்ந்து தள்ளி போகாதே , குருதி ஆட்டம் என ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்நிலையில் தற்போது இவர் நடித்த அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ராஜா மோகன் இயக்கத்தில் அதர்வா , இசக்கி பாரதி நடித்துள்ள அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in