The Indian Times

படத்துல காமெடியே இல்லை.. சொதப்பி வச்சிருக்காங்க.. சந்தானம் AGENT கண்ணாயிரம் PUBLIC REVIEW

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் கதாநாயகனாகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.சந்தானம் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் ரியா சுமன்,புகழ்,முனீஸ்காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி ,இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்தது,தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தின் ரீமேக் என்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகியது.

Advertisement

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தினை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படத்துல காமெடியே இல்லை,இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்,சந்தனத்தினை இயக்குனர் சரியாக உபயோகிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்,நல்ல படத்தின் ரீமேக்கை சுமாரா பண்ணிருக்காங்க,நல்ல ஓடும்னு நினைச்சோம் ஆனா வாய்ப்பு கம்மி,எதிர்பார்த்து வந்தோம் ஒன்னும் இல்லை படத்துல என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in