அண்ணே ஒரு FISH…மழலை குரலில் மீன் கேட்ட AILA | ALYA SANJEIV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

அண்ணே ஒரு FISH...மழலை குரலில் மீன் கேட்ட AILA | ALYA SANJEIV 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.இவரது மகள் ஐலாவை அண்மையில் பள்ளியில் சேர்த்துள்ளனர் மேலும் அவருக்கு சைக்கிளும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.இந்த இனிமையான நிகழ்வினை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

அண்ணே ஒரு FISH...மழலை குரலில் மீன் கேட்ட AILA | ALYA SANJEIV 2

விளம்பரம்

தற்போது ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் தனது குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு மகள் ஐலாவிடம் கடைக்காரரிடம் மீன் கேட்கும் படி கூறியுள்ளார்.அதற்கு மகள் ஐலாவும் தனது மழலையான குரலில் அண்ணே ஒரு மீன் என அழகாக கூறியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மழலைக்குரல் ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment