The Indian Times

நடனத்தினை பாதியிலேயே மறந்த PAVANI & AMIR..கடுப்பாகிய திட்டிய ரம்யாகிருஷ்ணன் | BIGG BOSS JODIGAL SEASON2

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த வாரம் நிகழ்ச்சியில் அசுர உலகம் மற்றும் தேவ லோகம் என்ற தீமில் நடனமாடி வருகின்றனர் போட்டியாளர்கள்.ஏற்கனவே நடன மாஸ்டர் ஆன அமீர் பாவனியுடன் ஜோடி சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து நடனத்தில் வெளுத்து வாங்கி ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல பெயரை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் இந்த வாரம் கண்ணன் போல் வந்து நடனத்தில் அசத்தியுள்ளார் அமீர்.ஆடிக்கொண்டிருக்கும் பொழுதே நடனத்தினை பாதியில் நிறுத்தினார் பாவனி ,இதனால் கடுப்பாகிய ரம்யாகிருஷ்ணன் என்ன ஆச்சு என கோவமாக கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : Vijay Television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in