The Indian Times

முதல் முறையாக மகன் ARSH-ஐ மக்களிடம் காண்பித்த ALYA MANASA..அப்படியே அம்மா போலயே இருக்காரே

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை ஆல்யாவும் சஞ்சீவும் தங்களது மகன் ARSH முகத்தினை வீடியோவில் மக்களுக்கு காண்பித்ததே இல்லை.இந்நிலையில் தனது மகன் முகத்தினை விரைவில் மக்களுக்கு காண்பிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் இன்று அதனை செய்துள்ளனர்.மகன் ARSH-ஐ காண்பித்து வீடியோ பதிவிட்டுள்ளார்கள் மேலும் இனி வரும் வீடியோவிலும் அவரை பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.மகன் பார்க்க அப்படியே ஆல்யா போலவே இருப்பதாக கூறி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து ஷேர் செய்து இவர்களது ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

Embed video credits : ALYA & SANJIEV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in