The Indian Times

ஆட தெரியாதுன்னு சொல்லிட்டு..அம்மு ஸ்ருத்திகா உடன் குத்தாட்டம் போடுறாரு தர்ஷன்

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.போட்டியாளர்கள் குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அலப்பறைகளை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர்கள்,அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா மூவரும் குக் வித் கோமாளி செட்டில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இருவருக்கு நடுவே தர்ஷன் நின்றுக்கொண்டு நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது ஸ்ருதிக்கா வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷன் ஆட தெரியாதுன்னு சொல்லிட்டு நல்ல ஆடுறீங்களே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோவை குக் வித் கோமாளி ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in