The Indian Times

EIFFEL TOWER முன்பு மான் போல துள்ளி குதித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ட்ரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் டாக்சி டிரைவராக நடித்து அசத்தி உள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

Advertisement

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பாரீசில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார் .சிகப்பு நிற உடையில் அங்குள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் முன்பு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் ஈபிள் டவரை பார்ப்பதா அல்லது அதைவிட அழகாக இருக்கும் உங்களை பார்ப்பதா என குழப்பமாக உள்ளதாக அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். குறைவான அளவு படங்களை நடித்திருந்தாலும்,பல முன்னை நடிகைகளுக்கு இருப்பதை போல ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உள்ளது தான் இவர் நடிக்கும் தேர்தெடுக்கும் கதையின் மந்திரம் ஆகும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in