The Indian Times

சிரஞ்சீவியுடன் மேடையில் ஜோடியாக நடனம் ஆடி கலக்கிய சாய் பல்லவி…

தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ்புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி தற்போது சாய் பல்லவி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் தமிழில் வெளியாகிய கார்கி படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

தற்போது சாய் பல்லவி கியூட் ஆக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் மேடையில் நடிகர் சிரஞ்சீவியுடன் கியூட் ஆக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நடனத்தில் ஏற்கனவே கலக்கி வரும் சாய் பல்லவி,நடனத்தில் புயலான சிரஞ்சீவியுடன் நடனமாட வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா ,சிறிய நேரம் ஆடி இருந்தாலும் சும்மா மேடையவே கலக்கி விட்டார் சாய் பல்லவி.இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in