The Indian Times

AIRPORT-ல் தன்னை பார்க்க காத்திருந்த ரசிகரை கட்டியணைத்து சென்ற அஜித் குமார்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

Advertisement

இவர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி வருகை தந்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போது அஜித் ஏர்போர்ட் செல்லும் பொழுது அங்கு தன்னை காண இருந்த ரசிகரை கட்டியணைத்து சென்றுள்ளார்,.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அஜித்தின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in