கனெக்ட் தோல்வியா?…விமர்சகர்கள் வாயை அடைத்த நயன்தாரா…இதுக்குதான் நான் லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

கனெக்ட் தோல்வியா?...விமர்சகர்கள் வாயை அடைத்த நயன்தாரா...இதுக்குதான் நான் லேடி சூப்பர் ஸ்டார் 1

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கனெக்ட்.இப்படத்தில் இவருடன் அனுபம் கேர்,சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. அண்மையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. 90 நிமிடங்கள் மட்டுமே இப்படம் ஓடும் என்பதால் பல திரையரங்குகள் இடைவேளை இல்லாமல் படத்தினை ஓட்டினர்.இப்படம் நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து வெளியாகும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

கனெக்ட் தோல்வியா?...விமர்சகர்கள் வாயை அடைத்த நயன்தாரா...இதுக்குதான் நான் லேடி சூப்பர் ஸ்டார் 2

விளம்பரம்

ஆனால் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இப்படம் தோல்வி அடைந்துள்ளது.பல விமர்சனங்கள் படத்தின் மேல் வைக்கப்பட்டன.இந்நிலையில் கனெக்ட் திரைப்படத்தினை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி,படம் குறித்து வந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்தப்படத்தில் சரிசெய்வதாக கூறியுள்ளார்.படம் தோல்வியடைந்தும் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நயன்தாரா என ரசிகர்கள் அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment