The Indian Times

என்னையா துணிவுன்னு சொல்லிட்டு BEAST காமிக்கிறீங்க… துணிவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர். இவர் நடிப்பிற்கென்றே பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் புகைப்படம் ஒன்று வெளியானாலே போதும் அதுதான் அவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே. அந்தளவுக்கு அஜித்தின் மேல் அவரது ரசிகர்களுக்கு பாசம். இவர் படம் வெளியாகும் நாள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாமே என்று கூறினால் மிகையாகாது.

Advertisement

தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மங்காத்தா போலவே அஜித் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வங்கியில் திருடும் கொள்ளையனாக வந்து மிரட்டி எடுத்துள்ளார். இன்று இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. ட்ரைலரில் அஜித் மிரட்டி எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும், வில்லத்தனமான நடிப்பினை காட்டி பிரித்தெடுத்துள்ளார்.

Advertisement

இருப்பினும் விஜய் ரசிகர்கள் அஜித்தின் துணிவை பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர், மேலும் துணிவு படம் பீஸ்ட் படத்தை போலவே அப்படியே உள்ளதாகவும், இனி விஜய்க்கு பதில் அஜித் எனவும் மீம்ஸ்களை போட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர். தற்போது துணிவு படத்தினை கலாய்த்து வெளியிட்டு வரும் மீம்ஸ்கள் பெருமளவு ட்ரெண்ட் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in