The Indian Times

கொலமாஸ் ஆக வெளியாகிய தல அஜித்தின் துணிவு TRAILER இதோ!!! மோதி பார்க்க தயார் ஆகிய தல

அஜித்குமார் தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.தோல்விகள் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல்,விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் இவை அனைத்திற்கும் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பதே அஜித்தின் ஸ்டைல் என்றே கூறலாம்.முதலில் உன் வீட்டை பார் பின் எனது படத்தினை பார் என அஜித் தனது ரசிகர்களை பார்த்து கூறுவது,ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தினை எடுத்துக்காட்டுகிறது. இதனால் தான் இத்தகைய ரசிகர்கள் பட்டாளத்தினை அஜித் என்ற மூன்று வார்த்தைகளில் அடக்கியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவரது படம் வெளியாகும் நாள் தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.தனது ரசிகர் மன்றத்தினை கலைத்து விட்டு எந்த ஒரு நடிகராலும் இத்தகைய உயரத்தினை தொட முடியாது.அது அஜித்திற்கான நிரந்தர இடம்.அண்மையில் இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வெளியாகிய வலிமை படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் துவண்டு போகாமல் மீண்டும் அதே கூட்டணியில் ஹிட் கொடுக்க தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது,போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தில் தல அஜித் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில்,தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ட்ரைலரில் அஜித் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடியில் மிரட்டியுள்ளார்.

Embed video credits : ZEE STUDIO

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in