The Indian Times

திடீரென மின்னல் போல தோன்றிய சூப்பர் ஸ்டார்…. கூடியிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போலஅண்மையில் கொண்டாடினர். சூப்பர் ஸ்டார் பிறந்தநாளன்று அவரை காண அவரது இல்லத்திற்கு ரசிகர்கள் சென்றனர்,ஆனால் அவர் படப்பிடிப்பில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை.

Advertisement

இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க சூப்பர் ஸ்டார் வீட்டின் முன்பு சூழ்ந்தனர்.உடனே வெளியே வந்த சூப்பர் ஸ்டார் அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Embed video credits : NEWS 18 TAMILNADU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in