The Indian Times

புலியை பிடிக்க புலியை தான் கொண்டு வரணும்… விக்ரம் பிரபு மிரட்டும் RAID ட்ரைலர் இதோ

பழம்பெரும் நடிகர் சிவாஜிகணேசன்,அவரது மகன் பிரபு,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு என மிகப்பெரிய சினிமா குடும்பத்தில் இருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவிற்கு வந்தவர் விக்ரம் பிரபு.இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் விக்ரம் பிரபு.முதல் படமே மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து பிரபலமாகிய இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வர தொடங்கியது.அடுத்தடுத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இடையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தாலும்,அதை பற்றி கவலையில்லாமல் மீண்டும் வெற்றிகாக போராடி வருகிறார்.அண்மையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் இவர் நடித்த டாணாக்காரன் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வந்துள்ளார்.இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் கும்கி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

Advertisement

தற்போது நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் கார்த்தி இயக்கத்தில்,முத்தையா தயாரிப்பில் ரெய்டு படத்தில் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in