The Indian Times

தமிழர் ஒருவரின் பைக்குக்கு நடுரோட்டில் பஞ்சர் போட்டு உதவிய தல அஜித் குமார்….தல நீங்க GREAT

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது 61வது படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் சிறிய இடைவெளிக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார்

Advertisement

அண்மையில் அஜித் தனது பைக்கில் லடாக் பயணம் சென்றிருந்தார்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது,அங்கு வழியில் தமிழர் ஒருவரின் பைக் பஞ்சர் ஆகி நிற்கவே,அஜித் குமார் உடனே அவருக்கு உதவி அவரே பஞ்சர் ஒட்டி கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.பலரும் அஜித்தின் உதவி மனப்பான்மையை பாராட்டி வருகின்றனர்

Embed video credits : Behindwoods MAX

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in