The Indian Times

குழந்தைகள் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்…

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இவர் அண்மையில் தனது பிறந்தநாளை குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கீர்த்தி சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.மேலும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in