The Indian Times

மனைவி இறந்த ஒரு வருடத்திற்குள் ரகசிய திருமணம் செய்துகொண்ட அருண் ராஜா காமராஜ்.. உண்மை என்ன

கனா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் அருண் ராஜா காமராஜ்.பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த இவர் தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவை அசத்தி வருகிறார்.இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கனா என்ற தரமான படத்தினை இயக்கி அனைவரது கவனத்தினையும் பெற்றார்.இவரது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன்.இருவரும் கல்லூரியில் இணைந்து படித்து தற்போது இணைந்தே பணியாற்றி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இவர் மீது நம்பிக்கை வைத்து இவரது முதல் படத்தினை தயாரித்தார்.பின்னர் அருண் ராஜா உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கினார்.இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இவரது மனைவி கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.இது இவருக்கும் பெரும் இழப்பாய் அமைந்தது.

Advertisement

இந்நிலையில் இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையில் தற்போது இவ்வாறு செய்திகள் பரவி கொண்டிருக்கிறது.இதற்கு அருண் ராஜா என்ன பதில் சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in