The Indian Times

Bike ஓட்டி சித்துவை அலறவிட்ட ஆல்யா மானசா! Raja Rani 2 Shooting Spot Fun

Watch the video below விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை.

Advertisement

பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டி இருந்தனர். இதை தொடர்ந்து இவர்கள் யுடியூப் சேனலிலும் பல வீடியோ க்களை அவ்வவ்ப்போது பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக சித்து நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஆல்யா மானசா , சித்துவை பைக்கில் வைத்து ஓட்டி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

https://youtu.be/MgDcCdEAEUI?t=5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in