The Indian Times

ஹர்பஜன் சிங் , பிக் பாஸ் லாஸ்லியா நடிக்கும் Friendship படத்தின் Making Promo

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரிய ஆகியோர் எழுதி இயக்கிய படம் ‘ஃப்ரண்ட்ஷிப்’. இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிக் பாஸ் லோஸ்லியாவும் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். மேலும் பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாகவும், சதீஷ் மற்றும் கலக்கப்போவது யாரு பாலா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2018ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், தற்போது 2021ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதை தொடர்ந்து தனது தமிழ் ட்வீட் மூலம் தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் ஹர்பஜன். ஹர்பஜன் ஹீரோவாகவும், பிக் பாஸ் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள லாஸ்லியாவையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement

அது மட்டுமில்லாது இரும்பு திரை படத்தை தொடர்ந்து தற்போது அக்ஷ்ன் கிங் அர்ஜுன் இந்த படத்திலும் வில்லனாக நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது friendship படத்தின் making promo வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in