The Indian Times

பிரபல நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லதுரை ஐயா காலமானார்!

பிரபல நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லதுரை கடந்த வியாழக்கிழமை மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது வயது 84. செல்லதுரை வியாழக்கிழமை மாலை அவரது குளியலறையில் மயக்க நிலையில் காணப்பட்டார். மாரடைப்பால் மயநிலைக்கு சென்று வீட்டிலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. சிவாஜி , மாரி, தெறி போன்ற பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்த செல்லதுரை தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தான்.

Advertisement

அவரது dialogue ஆன “அப்படியா விசயம்” என்ற dialogue இன்றும் இணையத்தில் பரவி வரும் மீம் ஆக இருக்கிறது. பல படங்களில் அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்து , ரசிகர்களை கண்ணீருக்கு ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் இன்று இவர் காலமான செய்தியை கேட்ட திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு அவர்களின் தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in