The Indian Times

அண்ணாத்த திரைப்படம் இந்த ஹிட் படத்தோட Copy யா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி தங்கை செண்டிமெண்ட் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதிலும் இந்த திரைப்படம் சிவாஜி நடித்த பாசமலர் திரைப்படத்தின் காப்பி என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. எது எப்படியாக இருந்தாலும் படம் வெளியான பிறகு தான் உண்மையும் வெளிவரும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in