The Indian Times

“எனக்கும் school ல இது போல நடந்துருக்கு” உண்மையை உடைத்த கௌரி கிஷன்!

தமிழ் சினிமாவில் 96 படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கௌரி கிஷன். ஸ்கூல் பிள்ளையாக நடித்து அசத்தி , அதன் பிறகு கல்லூரி பெண்ணாக தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து கலக்கினார். இந்நிலையில் நேற்று PSBB பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகை கௌரி தன்னுடைய பள்ளியிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று தன்னுடைய மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய ஸ்கூல் மெமரிஸ் ரொம்பவே மோசமாக இருந்திருக்கிறது, நான் சென்னை ஹிந்து சீனியர் செகண்டரி ஸ்கூலில் படித்தேன்.

Advertisement

அங்கையும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதே போல பல பிரெச்சனைகளை நானும் என்னுடைய நண்பர்களும் எதிர்கொண்டுள்ளோம். இது போன்ற பல விஷயங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன் , ஆனால் அதற்கு காரணமான அசுரர்கள் பெயரை கூறவிரும்பவில்லை.

என்னை போல் இன்னும் எதனை பெண்கள் இதே போன்ற பிரெச்சனைகளை எதிர்கொள்கிறார்களோ? அவர்கள் அனைவருக்கும் நாங்கள் துணை நிற்போம். இப்போ இந்த விஷயத்தை நான் வெளிப்படையா சொன்னது போல என்ன போல இருக்க பல பேர் இதை வெளிப்படையா சொன்னீங்க நா நமக்கு அடுத்து படிக்குற பெண்களாச்சும் இதெல்லாம் எதிர்கொள்ளாம இருப்பாங்க. என்று கௌரி கிஷன் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in