அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ! ரிஸ்க் எடுக்கும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வரும் முதல் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமாவுல கொடிகட்டி பறந்த இவர் சமீபத்தில் சற்று சரிந்து விட்டார் என்று தான் கூற வேண்டும். இவர் கடைசியாக நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டத்தை தேடி தந்தது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ! ரிஸ்க் எடுக்கும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம். 1

விளம்பரம்

இதற்கு முக்கிய காரணம் இவரது அரசியல் குறித்த சர்ச்சை தான். அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறி கொண்டிருந்த ரஜினி திடீரென அரசியலுக்கு வரவில்லை என்று கூறி ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இந்த சர்ச்சைகள் அனைத்தையும் தாண்டி தற்போது அவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியை உள்ள தகவலின் படி , முன்னர் இந்த படத்திற்காக பேசப்பட்டுள்ள பட்ஜெட்டை விட தற்போது இந்த படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

அண்ணாத்த திரைப்படத்தின் புதிய அப்டேட் ! ரிஸ்க் எடுக்கும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம். 2

விளம்பரம்

ஹைதராபாத்தில் துவங்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் காரணத்தால் அண்ணாத்த திரைப்படம் மிக பெரிய வசூலை குவிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்களுடன் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா , பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment