The Indian Times

மாஸ்டர் படத்தின் மேஷ் அப் வீடியோ வெளியீடு! | விஜய் லோகேஷ் கனகராஜ்.

கொரோனா வில் இருந்து மீண்டு வந்த தமிழகம் , சினிமாத்துறையில் பெரியளவில் மீண்டெழ முடியவில்லை. இன்னமும் பல மக்கள் சினிமாவிற்கு சென்று படங்கள் பார்ப்பதை தவிர்த்து கொண்டு தான் இருக்கின்றனர். திரையரங்கம் காலியாக இருக்கும் காரணத்தால் நிறைய பெரிய படங்கள் ஓ.டி.டி யில் வெளியானது. ஆனால் ஒரு படம் கொரோனா காலத்தில் வெளியாகி இருந்தாலும் பெரியளவில் வசூலை குவித்தது.

Advertisement

அது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. வெறும் 50 சதவீத இருக்கைகளையுடன் வெளியாகி இருந்தாலும் மிக பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் காட்சிகளாகட்டும் , விஜய் விஜய் சேதுபதியின் நடிப்பகட்டும் , லோகேஷின் இயக்கமாகட்டும் , அனிருத்தின் இசையாகட்டும் அனைத்துமே மக்களை கவர்ந்திழுத்துள்ளது என்பதே உண்மை. ஹீரோவிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு தான்.

Advertisement

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கேம்மிங் பாடல் பெரியளவில் ஹிட்டானது அனைவரும் அறிந்தது. சமீபத்தில் அந்த பாட்டின் மேஷ் அப் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதை தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் மற்றுமொரு மேஷ் அப் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in