The Indian Times

பாவாடை தாவணியில் அசத்தும் சாய்பல்லவி! விரட்ட பர்வம் டீஸர் வெளியீடு.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த நடிகர் ராணா டகுபதி. தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகில் பெரியளவில் அறியப்பட்டது பாகுபலி படம் மூலியமாக தான். பாகுபலி க்கு முன்பு ஆரம்பம் படத்தில் தல அஜித்துடன் நடித்திருந்தார். தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து , தற்போது இவர் நடிப்பில் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Advertisement

 

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ப்ரேமம் படத்தில் தன் க்யூட் எக்ஸ்பிரஸன் மூலம் இன்று வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் சாய் பல்லவி. ப்ரேமம் படத்தை தொடர்ந்து , தனுஷுடன் மாரி 2 , சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் இவர். இந்த டீசரை ராணாவின் ரசிகர்கள் பார்ப்பதை விட சாய்பல்லவியின் ரசிகர்கள் அதிகம் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.தற்போது இந்த டீசர் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in