மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் விஜய்! முழு விவரம் உள்ளே.

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். ஏற்கனவே மாநகரம் , கைதி போன்ற வெற்றி படங்களை குடுத்த லோகேஷ் மூன்றாவது முறை தளபதியை வைத்து எடுத்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் விஜய்! முழு விவரம் உள்ளே. 1

விளம்பரம்

வெறும் 50 சதவீத இருக்கையில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் படம் மிக பெரிய வசூலை குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தை கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அதே சமயம் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுக்க உள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் தளபதி 66 குறித்து பிளான் செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பேச்சு அடிவாங்குகிறது. இந்நிலையில் விஜய் லோகேஷ் கனகராஜிற்கு கால் செய்து தளபதி 66 படத்திற்காக கதை எழுதி வருமாறு கூறியிருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் விஜய்! முழு விவரம் உள்ளே. 2

விளம்பரம்

நீண்ட நாட்களாக லோகேஷின் ஸ்டைலில் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு உள்ளதாம். அதனால் மாஸ்டரில் கோட்டை விட்ட சில தவறுகளை திருத்தி முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் தளபதி 66 கதை எழுதி வருமாறு கூறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் கூட்டணி அமைக்கும் செய்தி தளபதி ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment