The Indian Times

மீண்டும் போலீஸ் கெட்டப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி! விஜய் சேதுபதி 46 வது படத்தின் புதிய அப்டேட்.

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். அதற்கு முன்பு இவர் வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

Advertisement

இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் 46 வது படத்தை பற்றிய புதிய அப்டேட்டை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 46 வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சன் பிக்ச்சர்ஸ். ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, தளபதி 65 ஆகிய படங்களை தயாரித்து வரும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதியின் 46 வது படத்தை தயாரிக்க உள்ளது.

Advertisement

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதை பார்க்கும்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் போலீசாக நடிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி போலீசாக நடித்து வெளிவந்த சேதுபதி படம் விஜய் சேதுபதியின் கரியரையே மாற்றி அமைத்தது. அதே போல் இந்த படமும் விஜய் சேதுபதிக்கு வெற்றியை தேடி தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in