The Indian Times

கற்பனையை மிஞ்சும் பிரம்மாண்ட GRAPHICS-ல் வெளியாகிய அவதார் 2 TRAILER

2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எழுதி,இயக்கி,தயாரித்து,எடிட்டிங்கும் செய்து வெளியாகிய படம் அவதார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இப்படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டியில் வெளியாகியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் அவதார் 2 திரைப்படத்தினை இந்த ஆண்டு டிசம்பர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.முன்னதாக வெளியாகிய முதல் பாகம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் என மூன்று பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்தது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : AVATAR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in