The Indian Times

பாலாவின் பிறந்தநாளிற்கு Surprise ஆக cake வெட்டிய விஜய் டிவி சரத் மற்றும் தீனா!

விஜய டிவியின் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் பாலா. இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று இன்று பல ரசிகர்களை ஈர்த்துவைத்துள்ளவர் பாலா. இதில் மட்டுமல்ல இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 6 வது சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் பாலா. கோர்வையாக கவுண்டர் போடுவதில் பாலாவை அடித்துக்கொள்ள முடியாது.

பாலா தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே பேச்சு திறமை அதிகமுள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலாவிற்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் கலக்கப்போவது யாரு சரத் மற்றும் தீனா. இவர்களோடு சரத்தின் மனைவியும் பாலாவின் பிறந்தநாளிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தராது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகா பரவி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in