The Indian Times

சம்யுக்தாவிற்கு Propose செய்து பல்பு வாங்கிய புகழ் ! BiggBoss Jodigal Promo

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று தான் பிக் பாஸ் ஜோடிகள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்துள்ளது விஜய் டிவி.

இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கள் சில நாட்கள் ஷூட்டிங் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிதுவங்கிவிட்டது . இந்த வாரம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாளி புகழும் கலந்துகொண்டு கலாட்டா செய்கிறார். 2வது ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in