The Indian Times

90s கிட்ஸ் favourite கனா காணும் காலங்கள் பாலாஜி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தொலைக்காட்சி தொடர்கள் மக்களை கவரும் வண்ணம் இருக்கும். அப்படி மக்களை கவர்ந்த ஏராளமான தொலைக்காட்சி தொடர்களைத் தந்த பெருமை விஜய் டிவியையும் சேரும். விஜய் டிவியின் தொலைக்காட்சி தொடர் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிப்பர். முன்பெல்லாம் இல்லத்தரசிகளுக்கான போழுதுபோக்கிற்கே சீரியல்கள் வந்தன. அவர்களுக்கேற்ற குடும்ப பாங்கான தொடர்களே வந்தன.

Advertisement

அப்படி இருந்த காலத்தில் இளம் வயதினரை கவரும் வண்ணம் ஒரு தொலைக்காட்சி தொடர் வந்தது. அதுதான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “கனா காணும் காலங்கள்”. இந்த தொடர் 2006 முதல் 2009 வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் சீரியல்கள் பார்க்க தொடங்கினர். கனா காணும் காலங்கள் தொடர் இன்றும் பலருக்கு நினைவிருக்கும் என்றே கூறலாம். கதைக்களம் பள்ளி பருவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியதாகும். இதில் நடித்த நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரமும் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற பாகங்கள் ஒளிபரப்பப்பட்டன. எல்லா தொடரும் மக்களிடையே வெற்றித் தொடர்களாக அமைந்தது. கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த ஏராளமான நடிகர் நடிகைகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கிடைத்தது. அதில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் யுவன் பாலாஜி.

அவருக்கு ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. யுவன் பாலாஜியின் முதல் படமான பட்டாளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்பு அவர் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே அமைந்தது. அதுவும் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே அமைந்தது. அதன்பின் நகர்வலம் என்ற படத்திலும் நடித்தார். அவர் ப்ரித்தி என்ற பெண்ணை 2016ல் திருமணம் செய்தார். ஒன்றறை வருடங்களுக்கு பின் காதலர் தினத்தன்று தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதாகவும் அவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதன்பிறகு அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது எந்த ஒரு தொலைக்காட்சி வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in