The Indian Times

பாவனிக்கு LOVE LETTER எழுதிய அபிஷேக்..நான் தான் எழுதுவேன் என கடுப்பாகிய அமீர்… BIGG BOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.வாரம் வாரம் போட்டியாளர்களுக்கு இடையே போட்டி கடுமையாகி கொண்டு வருகிறது.

Advertisement

இந்த வாரமும் போட்டியாளர்கள் நடனத்தில் கலக்கி உள்ளனர்.இந்த ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் போல அபிஷேக் மிமிக்ரி செய்வதாக கூறி,குணா படத்தில் வரும் காதல் கடிதம் எழுதும் சீனை ராஜுவுடன் இணைந்து நடித்துள்ளார்.அப்பொழுது காதல் கடிதத்தில் கண்மணி அன்புடன் காதலன் நான் எழுதும் கடிதம் அதில் கண்மணி ரொம்ப பழசா இருக்கு பாவனினு போட்டுக்கோ என கூற அப்போ லவ் லெட்டர் நான் தான் எழுதணும் என அமீர் கடுப்பாகியுள்ளார்.இந்த ப்ரோமோ தற்போ வைரலாகி வருகிறது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in