எனக்காக சிம்பு இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சாரு…மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய நடிகை ஹன்சிகா

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .ஆரம்பத்தில் பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு,தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என உடனே ஓகே சொல்லினார்.அதன்படி இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இப்படத்தின் மூலம் பல மக்களுக்கும் பரிட்சயம் ஆகினார் ஹன்சிகா.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

எனக்காக சிம்பு இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சாரு...மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய நடிகை ஹன்சிகா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் தனது 50வது படமான மஹா படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் தமன் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

எனக்காக சிம்பு இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சாரு...மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய நடிகை ஹன்சிகா 2

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் சிலம்பரசன்,தம்பி ராமையா ஸ்ரீகாந்த் என பலர் நடித்துள்ளனர்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.அதன்படி தற்போது இப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட ஹன்சிகாவிடம் ,உங்களுக்கு எப்பொழுது திருமணம் என பத்திரிகையாளர் கேட்டதற்கு,எனக்கு திருமணம் ஆகிவிட்டது என கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,தனது நடிப்பு தொழிலை அதிகம் காதலிப்பதால் அதனையே திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார் ஹன்சிகா.சிறிது நேரத்தில் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.மேலும் நடிகர் சிம்புவிற்கு ஒரு போன் தான் செய்தேன் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வந்துவிட்டார் என கூறி நன்றி தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

விளம்பரம்

Embed video credits : AMN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment