The Indian Times

Make Up போட்டு கொண்டு அச்சு அசல் விஜய் சேதுபதி போலவே மாறிய ரசிகை! Viral video

தமிழ் சினிமாவில் இயல்பாக நடித்து பல இதயங்களை கவர்ந்த நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஹீரோ கதாபாத்திரம் என்றாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி அதை தன் தத்ரூபமான நடிப்பில் நடித்து முடித்து கொடுப்பார். இவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் குட்டி ஸ்டோரி. அதில் ஒரு பாகத்தில் நடித்திருந்தாலும் அனைவரையும் ரசிக்கும்படி செய்தார். அதற்கு முன்பு இவர்

வில்லனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து துக்லக் தர்பார் , காதுவக்குல ரெண்டு காதல் , யாதும் ஊரே யாவரும் கேளிர் , லாபம் , மாமனிதன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இது போக கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Advertisement

அதுமட்டுமில்லாது சன் டிவியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படி தன்னுடைய கால்ஷீட்டை பிஸி யாகவே வைத்துள்ள விஜய் சேதுபதியின் ரசிகை ஒருவர் அவரை போலவே மேக் அப் போட்டு கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் சேதுபதி ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=_o_EV9gGGFU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in