The Indian Times

என்னை விட்டு போகாதீங்க பாரதி… கணவனை தேடி கார் பின்னால் ஓடிய கண்ணம்மா… பரபரப்பான பாரதி கண்ணம்மா கடைசி PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி கண்ணம்மாவின் சொந்த ஊருக்கே வருகிறார். சொந்த ஊருக்கு வந்து தனது மனைவியை அழைத்து செல்ல பல வழிகளை மேற்கொண்டும் இறுதியாக கண்ணம்மா பாரதிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.

கண்ணம்மாவுக்காக சண்டைக்கு சென்ற பாரதி அடிபட்டு சுயநினைவை இழந்து பழசயெல்லாம் மறந்துவிடுகிறார்.கண்ணம்மாவின் தீவிர முயற்சியால் பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகள் திரும்பியுள்ளது.தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இந்த ப்ரோமோவில் பாரதி கண்ணம்மாவிடம் வந்து,உன்னை திரும்ப சென்னை அழைத்து போவேன் என சவால் விட்டு தான் வந்தேன்,ஆனால் உன் மனசை ஜெயிக்க முடியலை,உன்னைவிட்டு பிரிய போகிறேன் என கூறி பாரதி செல்லவே,கண்ணம்மா பின்னாலையே அழுதுகொண்டு பாரதியை தேடி செல்கிறார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in