The Indian Times

அசீம் ஜெயிச்சது ஒரு BAD EXAMPLE – VJ மகேஸ்வரி பளிச் பதில்

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம். வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருந்தார்.மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மகேஸ்வரி சென்ற பின்பு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைய தொடங்கியது.

தற்போது விஜே மகேஸ்வரி அண்மையில் அளித்த நேர்காணல் வீடியோவில் அசீம் வெற்றிபெற்றது குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,அசீமை விட வெற்றிபெற தகுதியானவர்கள் வீட்டில் இருந்தார்கள்,நான் எங்கும் விக்ரமன் வெற்றிபெற வேண்டும் என கூறவில்லை,எனக்கு விக்ரமன் வெற்றிபெற்றிருந்தாலும் சந்தோசம்,உள்ளே இருந்த ஷிவின் வெற்றிபெற்றிருந்தாலும் சந்தோசம்.அசீம் வெற்றிபெற்றது சமுதாயத்திற்கு ஒரு கெட்ட உதாரணம் என கூறியுள்ளார்.அசீம் மேல் எனக்கு எந்த கோவமும் இல்லை அவர் என் சக போட்டியாளர்,அசீம் மத்த போட்டியாளர்களை அவமானப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.இதனால் அசீம் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Embed video credits : GALATTA TAMIL

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in