The Indian Times

பாரதி கண்ணம்மா மகளுடன் மரணகுத்தாட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

Advertisement

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் தாமரை அங்கு மரண குத்தாட்டம் போட்டுள்ளார். கண்ணம்மா மகளாக நடிக்கும் குழந்தையுடன் மிரட்டல் நடனம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தாமரை நடனத்தினை சூப்பர் என கூறி பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in