The Indian Times

கயல் சீரியலில் இருந்து வெளியேறிய கதாநாயகன்… சோகத்தில் ரசிகர்கள்

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் 5 நாட்களும் காலையும் மாலையும் தவறாமல் பல நாடகங்களை கொடுத்து இல்லத்தரசிகளை தங்கள் வசம் வைத்துள்ளது.ஹிட் அடித்த நாடகங்கள் என்று கூறினால் அதில் 100க்கு 99 நாடகங்கள் சன் தொலைக்காட்சியில் உள்ள நாடகங்களாக தான் இருக்க வேண்டும்.அந்த அளவிற்கு நாடகங்களை வரிசையாக களம் இறக்கி வைத்துள்ளது.

Advertisement

சன் தொலைக்காட்சியில் நாடகத்தில் டி ஆர் பி அளவு முதல் உள்ள நாடகம் ரோஜா.பல நாட்களாக இந்த நாடகத்தினை முந்துவதற்கு எந்த நாடகத்தினாலும் முடியவில்லை.தற்போது இந்த நாடகத்தினை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகம் முந்தியுள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பத்தில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.இவர் நடிப்பு இந்த நாடகத்தினை டி ஆர் பியில் முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

Advertisement

இந்த நாடகத்தில் கதாநாயகனாக வருபவர் தான் சஞ்சீவ்.இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்பினை கொண்டு அசத்தி வருகிறார்.இவருக்கு பிறகு இந்த சீரியலில் யார் இந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் இந்த அளவுக்கு இருக்காது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.இந்நிலையில் இவர் இந்த சீரியலில் விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.மேலும் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவ் பதிவிட்டு,இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கூறியுள்ளார்.இதனால் இவர் சீரியலை விட்டு வெளியேறிருக்கலாமோ என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in