அடேங்கப்பா துணிவு படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளை…அனைத்தையும் நீக்கிய சென்சார் போர்டு

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

அடேங்கப்பா துணிவு படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளை...அனைத்தையும் நீக்கிய சென்சார் போர்டு 1

விளம்பரம்

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.இப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படமும் வெளி வர இருப்பதால் யார் படம் வெற்றிபெற போகிறது என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.அண்மையில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

அடேங்கப்பா துணிவு படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளை...அனைத்தையும் நீக்கிய சென்சார் போர்டு 2

விளம்பரம்

ட்ரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.தற்போது இப்படம் சென்சாருக்கு சென்றுள்ளது.அங்கு படத்தில் இருந்த பல கெட்டவார்த்தைகளை நீக்கியுள்ளது சென்சார் போர்டு.மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடம் 40 நொடிகள் ஆகும்.இந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment