The Indian Times

மனைவி குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்ற தல அஜித்…. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் வெளியாகிய 24 மணி நேரத்திலேயே 3 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் தல அஜித் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தல அஜித் அவர்கள் மனைவி ஷாலினி மற்றும் மகன் மகள் உடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் அஜித் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in