The Indian Times

என்னை உருவாக்கிய உள்ளங்களுக்கு நன்றியும்,முத்தங்களும்… தளபதி விஜய் FULL SPEECH

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

இந்த விழா நேற்று சன் டிவியில் ஒளிபரப்பாகியது.மேலும் தளபதி விஜய் அனல்பறக்க பேசிய முழு தொகுப்பையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் டிவி. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய தளபதி ,என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்கள் என தொடங்கி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை கூறிகிட்டே இருக்கனும்,எனவே என்னை உருவாக்கிய உள்ளங்களுக்கு நன்றியும்,முத்தங்களும் என கூறி ரசிகர்களுக்கு ரஞ்சிதமே முத்தத்தினை பறக்க விட்டுள்ளார்.

Embed video credits : SUN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in