The Indian Times

அம்மா அப்பாவை தேடி நிகழ்ச்சியில் அழுத IYKKI BERRY… BIGGBOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை புதியதாக நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் மிரட்டல் நடனம் ஆடி டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்..வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் அமீர் மற்றும் பாவனி மற்றும் ஐக்கி பெரி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி மேடையில் ஐக்கி பெர்ரி தனது அம்மா மற்றும் அப்பாவை தேடி அழுதுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,எதுக்கு எல்லா இடத்துலயும் இந்த பொண்ணு இதையே சொல்லுதுனு நீங்க நினைக்கலாம் அவங்க தான் எனக்கு எல்லாமே என கூறியுள்ளார்,பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அப்பா எனக்கு போன் பண்ணி நண்பர்களிடம் அறிமுக படுத்தினார்.பின்னர் தற்போது வரை ஒரு போன் இல்லை ,மேலும் அவர்கள் சென்ற பிறகு என்னிடம் வெறுப்பாக பேசினார்கள்,எப்படி ஒரு மக்களிடம் போலியான அன்பை காட்ட முடிகிறது.என கதறி அழுதுள்ளார்.ஐக்கி பெரி பார்ப்பதற்கே பாவமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=w0WpFISJR_Q&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in